சட்டப் பேரவை இடைத் தேர்தல் பொறுப்பாளர்கள்: அதிமுக அறிவிப்பு

நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. 
அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 
அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 


நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சூலூர்-அரவக்குறிச்சி: சூலூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக கோவை, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவள்ளூர், பெரம்பலூர், வட சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை வடக்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சூலூர் தொகுதிக்கு நியமிக்கப்படுகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்களாக கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, தென் சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம்-ஓட்டப்பிடாரம்: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கடலூர், சிவகங்கை, தஞ்சாவூர், வடசென்னை தெற்கு, வடசென்னை வடக்கு (கிழக்கு) ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், கட்சியின் துணை அமைப்புகளைச் சேர்ந்த தேர்தல் பணியாற்றுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com