நான்கு பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் பொதுச் செயலாளர்
நான்கு பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு


தமிழகத்தில் காலியாகவுள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திங்கள்கிழமை வெளியிட்டார். 
சூலூர்-கே.சுகுமார், அரவக்குறிச்சி-பி.எச்.சாகுல் ஹமீது, திருப்பரங்குன்றம்-ஐ.மகேந்திரன், ஓட்டப்பிடாரம்-ஆர்.சுந்தரராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்: நான்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் இரண்டு பேர் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஆவர். திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளரான ஐ.மகேந்திரன், உசிலம்பட்டி (2006-11) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். முன்னதாக உசிலம்பட்டி நகராட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது, அமமுக-வின் மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
இதேபோன்று, ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளரான ஆர்.சுந்தரராஜ், கடந்த 2016-இல் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்பு, தகுதி நீக்கத்துக்கு ஆளாகி பதவியை இழந்தார். அமமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளராகவும், எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
முன்னாள் எம்.பி.: சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.பி.கே.சுகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 2009 முதல் 2014-ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராக இருந்தவர். இப்போது கோவை புறநகர் மாவட்டச் செயலாளராக உள்ளார். அரவக்குறிச்சி வேட்பாளர் பி.எச். சாகுல் ஹமீது, ஜெயலலிதா பேரவை தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com