நான்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது: ஏன் தெரியுமா? 

தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது: ஏன் தெரியுமா? 

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் (தனி) மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அதேசமயம் மே 2 ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாஹூ வியாழன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஏப்ரல் 27-ல் வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை, அத்துடன் 28-ம் தேதி ஞாயிறு விடுமுறை. இதன்  காரணமாக இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் 27 , 28 தேதிகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com