அரசியலை விட்டே விலக தயார்: திருமாவளவன் ஆவேச பேச்சு

தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள்
அரசியலை விட்டே விலக தயார்: திருமாவளவன் ஆவேச பேச்சு


தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் முன்வைத்தனர்.

பொன்பரப்பியில் நடந்த சம்பவத்தைக் கண்டித்தும், அங்கு மறுவாக்குப் பதிவு நடத்தக் கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்  சென்னையில் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றன. 

அப்போது திருமாவளவன் பேசுகையில், பாஜகவும், பாமகவும் அனைத்து மரபுகளையும் மீறி ஜனநாயகத்தைச் சிதைத்துள்ளன. பாஜகவிடம் இருந்து அப்பாவி இந்துக்களையும், பாமகவிடம் இருந்து அப்பாவி வன்னியர்களையும் காப்பாற்ற வேண்டும். பொன்பரப்பியில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும். நடுநிலையாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாரகச் செயல்படுகிறது. கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மானத்திற்காக வாழ்பவன் நான். 

ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் பணத்திற்காகவும், பதவிக்காகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். வன்னியர்களின் ஒரே எதிரியான பாமகவுக்கு தென் தமிழகத்தில் வாக்குச்சாவடி முகவர்களை அமைக்க ஆள் உள்ளதா? என்று பேசிய திருமாளவன், ராமதாஸ் மற்றும் அன்புமணிக்குத் தான் அரசியலில் இருப்பது பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்காக அரசியலை விட்டு விலக தயார். 

எனக்குத் தேவை உழைக்கும் மக்களின் பாதுகாப்பு அதைத் தவிர ஒன்றும் தேவையில்லை. அதனால், அவர்களுக்காக அரசியல் வாழ்க்கையை விட தயாராக இருக்கிறேன் என்று ஆவேசத்துடன் அனல் கக்க பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com