எட்டு வழி சாலைத் திட்டத்தை அனுமதிக்க முடியாது: காங்கிரஸூக்கு பாமக பதில்

எட்டு வழி சாலைத் திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பாமக பதில் அளித்துள்ளது.

எட்டு வழி சாலைத் திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பாமக பதில் அளித்துள்ளது. மேலும், தேர்தல் பிரசார நேரத்தில் எட்டு வழி சாலைத் திட்டத்தைப் பற்றி பேசாமல் இருந்தது ஏன் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, பாமக கேள்வி எழுப்பியுள்ளது.
எட்டு வழி சாலைத் திட்டம் தொடர்பாக பாமகவை விமர்சித்து பேசியிருந்தார், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி. இதற்கு பதிலளித்து பாமக தலைவர் ஜி.கே.மணி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: 8 வழி சாலைத் திட்டத்தை ஆதரித்து 10 ஆயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அப்படிப்பட்ட துரோகத்தை காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் செய்யும்; பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் செய்யாது. வார்த்தைக்கு வார்த்தை வளர்ச்சி குறித்தும், 8 வழிச்சாலை குறித்தும் பேசும் காங்கிரஸ், தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்தது ஏன் என்று ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com