ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

ஆசிய தடகள போட்டியில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு


சென்னை: ஆசிய தடகள போட்டியில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று தங்கம் வெல்வேன் என்று கோமதி மாரியப்பன் உறுதியோடு கூறியுள்ளார்.

டோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி (30), தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ராசாத்தி தம்பதியின் மகள் கோமதி (30). மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி, அடிப்படை வசதிகளில்லாத கிராமம், பள்ளிப் படிப்புக்கு கூட 15 கி.மீ. தொலைவு நடந்தே செல்லும் நிலை இருந்தது அவருக்குள் தடகளப் போட்டிக்கான உத்வேகத்தை அளித்தது. 

தற்போது 2019 டோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீ., ஓட்டத்தில் (2 நிமிடம், 2.70 விநாடிகள்) தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்தவர் கோமதி மாரியப்பன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com