மத்தியில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்தியில் பாஜக மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்தியில் பாஜக மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட பாஜக முன்னாள் பொதுச் செயலர் மு.சக்திகணபதி அண்மையில் காலமானார். இதையடுத்து, கடலூரில் உள்ள அவரது வீட்டுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் சரிவை எட்டுவதற்கு காரணகர்த்தாவாக இருப்பவர் ப.சிதம்பரம். அவரது ஒவ்வொரு வார்த்தையும் அந்தக் கட்சிக்கு சரிவை ஏற்படுத்துகிறது. மத்தியில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி.

பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சியால் நிறுத்த திட்டமிடப்பட்டிருந்த பிரியங்கா களத்தில் நிற்காமல் ஓடிவிட்டார். அவர் போட்டியிட்டால் வைப்புத் தொகை கூட கிடைக்காது. காங்கிரஸ் கட்சி ஏறக்குறைய 60 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தும், நாடு அடைய வேண்டிய உச்சத்தை அடையவில்லை. ஆனால், 60 மாத கால மோடி ஆட்சியில் மிகப் பெரிய வெற்றியை நாட்டுக்கு கொடுத்துள்ளார். அரசின் அனைத்துத் துறைகளும் பெரிய சாதனைகளைப் புரிந்துள்ளன. தமிழக விவசாயிகள் தில்லியில் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் ஆட்சியின்போது விவசாயத் துறையில் ஏற்பட்ட தோல்வியே தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு காரணம். தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதாக திமுக கூறி வருகிறது. எனது காரைகூட தேர்தல் ஆணையத்தினர் சோதனையிட்டனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது எனது கடமை. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீனவர்கள் வசிக்காத பகுதியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்சம் 30 பேருக்கு வாக்கு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாதி, மத பிரச்னையை தமிழகத்தில் உருவாக்கியதே காங்கிரஸ், திமுக கட்சிகள்தான். இதை வைத்தே அந்தக் கட்சிகள் அரசியல் செய்கின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com