இணக்க முறை வரி: காலக்கெடு நீட்டிப்பு

சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின்கீழ் இணக்க முறையில் வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-


சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின்கீழ் இணக்க முறையில் வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையில் சிறு வியாபாரிகளை ஊக்குவிக்க எளிமையான இணக்கவரி செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. அதன்படி, இப்போது இணக்க வரியினை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31-இல் நிறைவடைவதாக இருந்தது. இந்த கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com