ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு: செப்.15-இல் மாநில மொழிகளிலும் நடைபெறுகிறது

தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு: செப்.15-இல் மாநில மொழிகளிலும் நடைபெறுகிறது


தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொலைதொடர்பு துறை ஜூலை  11-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், அஞ்சல்துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் ஹிந்தி, ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும். 2-ஆம் தாள் தேர்வை உள்ளூர் மொழிகளில் எழுதலாம். அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அஞ்சல் ஊழியர்கள் சங்கம், அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையில்,  தபால் துறையில் கிராமப்புறங்களில் பணிபுரியும் கடை நிலை ஊழியர்கள், எழுத்தராகப் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு, நாடு முழுவதும் ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்றது. ஏற்கெனவே பணியாற்றி வரக்கூடிய 989 பேர் பதவி உயர்வு, பணி நிரந்தரம் பெறுவதற்காக நடைபெற்ற இந்தத் தேர்வில் 1,200 பங்கேற்றனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய 4 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இப்பிரச்னை, மாநிலங்களவையில் தி.மு.க., அ.தி.மு.க உள்பட பல்வேறு கட்சிகள் தரப்பில் எழுப்பப்பட்டது. அப்போது, அதற்குப் பதிலளித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், ஜூலை  14- ஆம் தேதி நடைபெற்ற  தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனிமேல், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழிகளில் வினாக்கள் கொடுக்கப்படும் எனவும் தபால்துறை அறிவித்துள்ளது. 
இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தபால்துறைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 
தபால்காரர், உதவியாளர் பணிகளுக்கான தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். ஏற்கெனவே, அனுப்பப்பட்ட சுற்றறிக்கை திருத்தி அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டம் சார்பிலும், வினாத்தாளை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வர்களுக்கு வழங்க வேண்டும். 
ஹிந்தி பேசாத மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து தேர்வர்களுக்கு வழங்க வேண்டும். வினாத்தாள்களை 4 வகைகளில் ஜம்பிலிங் முறையில்  தயாரிக்க  வேண்டும். அதன்படி, கட்டாயமாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அல்லது மாநில மொழிகளில் வினாத்தாள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com