டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளிகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு 

டெங்கு காய்ச்சலை தடுக்க 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகங்கள், மைதானங்களை தூய்மையாகப் பராமரிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை தடுக்க 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகங்கள், மைதானங்களை தூய்மையாகப் பராமரிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 அதில், மழைக்காலம் தொடங்கவிருப்பதால், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலைக் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உள்ள தேவையற்ற செடிகள், முள்புதர்கள், தேங்கியிருக்கும் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பள்ளி மாணவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காய்ச்சலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள், எதனால் காய்ச்சல் ஏற்பட்டது, என்ன காய்ச்சல் என்று தலைமை ஆசிரியருக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com