எந்த வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது: திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி 

எந்த வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது என்று வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவின் வெற்றி குறித்து, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தையும் கட்சிப் பொருளாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
எந்த வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது: திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி 

சென்னை: எந்த வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது என்று வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவின் வெற்றி குறித்து, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தையும் கட்சிப் பொருளாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த 5-ஆம் தேதியன்று நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளியன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்று வந்தார். ஆனால் திடீர் திருப்பமாக இறுதிநேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த முன்னிலை பெற்றார்.

இறுதியில் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தால் கதிர் ஆனந்த்  வெற்றி பெற்றுள்ளார். ஆனால் வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு நடைபெற்று வருவதால் அவரது வெற்றி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு தற்போது வெளியாகவில்லை.

இந்நிலையில் எந்த வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது என்று வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவின் வெற்றி குறித்து, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தையும் கட்சிப் பொருளாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

முன்னர் நடைபெற்ற தேர்தலில் 37 தொகுதிகளில் எப்படி திமுகவிற்கு வாக்களித்தார்களோ அதேபோன்றுதான் தற்போதும் திமுகவிற்கு மக்கள் வாக்களித்து வெற்றியை உறுதி செய்துள்ளார்கள்.

குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள வாணியம்பாடி தொகுதியில் திமுக அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு  திமுக என்றும் பாதுகாப்பு அரணாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் எந்த வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது. இந்த வெற்றியை திமுகவிற்கும் ஸ்டாலினுக்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com