முக்கொம்புக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்பு

முக்கொம்புக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்பு

கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு 3 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வர வாய்ப்புள்ள சூழலில், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக வெளியேற்றப்பட்டால் கடந்தாண்டைப் போல்


கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு 3 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வர வாய்ப்புள்ள சூழலில், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக வெளியேற்றப்பட்டால் கடந்தாண்டைப் போல் நிகழாண்டிலும் முக்கொம்பில் மீண்டும் அபாயத்தை எதிர்கொள்ளும் சூழல் உள்ளது.
    கடந்தாண்டு ஆக.18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் முக்கொம்பு மேலணைக்கு முறையே வினாடிக்கு 2.20 லட்சம், 1.83 லட்சம் மற்றும் 1.72 லட்சம் கன அடி நீர் வரத்து வந்த நிலையில், காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்ததுடன்  ஆக.22  இரவு வெள்ளத்தில் கொள்ளிடத்தில் மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது, கொள்ளிடத்தில் 20 ஆயிரம் கன அடியும், காவிரியில் 30 ஆயிரம் கனஅடியும் கூடுதலாக திறக்கப்பட்டதாக கூறப்பட்டது.       இப்போது, மேட்டூர் அணைக்கு 3 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி வரத்து முழுவதுமாக அதாவது 2.50 லட்சம் அல்லது 3 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படும். முக்கொம்பு பகுதியில் ஏற்கெனவே வலுவிழந்து மதகுகள் உடைந்து காணப்படும் மேலணையில் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தாலே தாங்காது. 
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என முக்கொம்பு பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com