ராணுவ தளவாட தொழிற்சாலைகளை  கார்ப்பரேஷனாக மாற்றக் கூடாது:   ஆக.20 முதல் ஒரு மாதம் வேலைநிறுத்தம்

 நாடு முழுவதும் உள்ள 41 ராணுவ தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வரும் ஆக.20-ஆம் தேதி முதல் ஒரு மாதம் வேலை நிறுத்தப் போராட்டம்


 நாடு முழுவதும் உள்ள 41 ராணுவ தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வரும் ஆக.20-ஆம் தேதி முதல் ஒரு மாதம் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம்,  இந்திய தேசிய பாதுகாப்பு துறை தொழிலாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியத்தின் கீழ், 41 தொழிற்சாலைகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ராணுவத்துக்கு தேவையான பல் வேறு ஆயுதங்கள், பீரங்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல் வேறு தளவாட பொருள்கள் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்துக்கு அனுப்பப்படுகிறது.
தமிழகத்தில் ஆவடி, திருச்சி, ஊட்டி, அரவங்காடு, புனே, ஜபல்பூர், கான்பூர், கொல்கத்தா, சண்டிகர், மேடக் என நாடு முழு வதும் பல்வேறு இடங்களில் இந்தத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.  இவற்றின் மூலம்  சிறு, குறு நிறுவனங்களை சேர்ந்த 10 லட்சம் பேர் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்தத் தொழிற்சாலைகளை பொதுத் துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது.  இதைத் தொடர்ந்து அவற்றை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற்றி தனியார் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு தனியார் நிறுவனங்கள் லாப நோக்குடன் நிர்ணயிக்கும் விலையில்தான் ராணுவம் தளவாடங்களை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். 
கடந்த காலங்களில் தொழிற்சங்கங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறி தற்போது இவற்றை கார்ப்பரேஷனாக மாற்றும் இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.  இந்த நிறுவனங்களை  அரசுத் துறை நிறுவனங்களாக தொடர்ந்து செயல்படுத்திட ஊதிய செலவு நிதியை தனியாக ஒதுக்கீடு செய்து அவற்றை உற்பத்தி விலையில் சேர்க்காமல் ராணுவத்துக்கு தளவாடங்களை உற்பத்தி செய்கின்ற முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். 
 இந்தக் கோரிக்கையை மையப்படுத்தி வரும் ஆக.20-ஆம் தேதி முதல் செப்.19-ஆம் தேதி வரை ஒருமாத காலத்துக்கு வேலை நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட் டுள்ளது.  இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்தில் 10 ஆயிரம் பேரும், நாடு முழுவதும் 90 ஆயிரம் ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com