சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை கௌரவிக்க முதல்வரின் புதிய திட்டம்

2019ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 16 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை கௌரவிக்க முதல்வரின் புதிய திட்டம்

2019ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 16 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

1. செ. சைலேந்திரபாபு,
காவல்துறை இயக்குநர்
இருப்புப்பாதை,
சென்னை.

2. கந்தசுவாமி
கூடுதல் காவல்துறை இயக்குநர்,
நிர்வாகம்,
சென்னை.

3. முனைவர் இரா.தினகரன்,
கூடுதல் காவல் ஆணையாளர்,
சட்டம் ஒழுங்கு வடக்கு,
சென்னை பெருநகர காவல்.

4. ஜா. நாகராஜன்,
காவல் ஆய்வாளர்,
கிச்சிப்பாளையம் காவல் நிலையம்,
சேலம் மாநகரம்.

5. சி.செந்தில்குமார்,
காவல் ஆய்வாளர்,
ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு, தஞ்சாவூர்
மாவட்டம்.

6. சா. டெய்சி.
பெண் தலைமைக் காவலர் 19067,
ஜி-4 மனநிலை காப்பக நிலைய காவல் நிலையம்,
கிழக்கு மண்டலம்,
சென்னை பெருநகர காவல்.

இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

1. எஸ். வனிதா,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,
மதுவிலக்கு அமல் பிரிவு,
மதுரை.

2. டி. புருஷோத்தமன்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
போதை பொருள் தடுப்பு பிரிவு
குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை

3. எஸ். கிருஷ்ணன்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
திட்டமிட்ட குற்ற பிரிவு, குற்றப்பிரிவு
குற்றப்புலனாய்வுத்துறை,
சேலம் மாநகரம்.

4. திரு.வ. அசோகன்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
மன்னார்குடி உட்கோட்டம்,
திருவாரூர் மாவட்டம்.

5. எஸ். கிரிஸ்டின் ஜெயசில்,
காவல் ஆய்வாளர்,
எஸ்-5 பல்லாவரம் காவல் நிலையம், சென்னை
பெருநகர காவல்.

6. ப. காசிவிஸ்வநாதன்,
காவல் ஆய்வாளர்,
எச்-1 வண்ணாரப்பேட்டை போக்குவரத்து
புலனாய்வு காவல் நிலையம்,
சென்னை பெருநகர காவல்.

7. ஏ. ஞானசேகர்,
காவல் ஆய்வாளர்,
திலகர் நகர் காவல் நிலையம்,
திருச்சி மாநகரம்.

8. கோ. அனந்தநாயகி,
காவல் ஆய்வாளர்,
குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு,
கோயம்புத்தூர்.

9.து. நடராஜன்,
காவல் ஆய்வாளர்,
ஒரகடம் காவல் நிலையம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

10. பி. தேவி,
காவல் ஆய்வாளர்,
ஒருங்கினைந்த குற்ற பிரிவு, குற்றப்பிரிவு
குற்றப்புலனாய்வுத்துறை,
திருநெல்வேலி மாநகரம்.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

மேற்கண்ட விருதுகள், முதல்வர் பங்கேற்கும் விழாவில் மேற்சொன்ன காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com