இது சுதந்திர தின சிறப்பு மழைச் செய்தி: முற்றிலும் உங்களுக்காகவே!

இது சுதந்திர தின சிறப்பு மழைச் செய்தி: முற்றிலும் உங்களுக்காகவே!

இன்று சுதந்திர தினம், சுதந்திர தின வாழ்த்துகளோடு, சிறப்பு மழைப் பதிவையும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.


சென்னை: இன்று சுதந்திர தினம், சுதந்திர தின வாழ்த்துகளோடு, சிறப்பு மழைப் பதிவையும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டிருக்கும் ஃபேஸ்புக் பதிவில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழை தொடங்கிய முதல் நாளிலேயே 100 மி.மீ. மழையைப் பொழிந்து தள்ளிவிட்டது.

அதுமட்டுமல்ல, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், டெல்டா மற்றும் தமிழகத்தின் இதர உள் மாவட்டங்களுக்கு அடுத்து வரும் நாட்கள் அட்டகாசமாக உள்ளது. மேலும் பல பகுதிகள் இந்த மழை விருந்தில் இணையும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு பக்கம் தென்மேற்குப் பருவ மழை பலவீனம் அடைந்திருப்பதும், மற்றொரு பக்கம் வெப்பச் சலன மழையுமே இதற்குக் காரணம்.

இதன் காரணமாக வெப்பத்தால் உண்டாகும் மேகக் கூட்டங்கள் அடுத்து வரும் நாட்களில் அதிகமாகும். பருவ மழைக் காலத்தைப் போல சில நாட்கள் காலையிலும், பகல் நேரத்திலும் கூட மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதே நேரத்தில் பெங்களூரு மற்றும் சேலத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் பெங்களூருவுக்கு ரெட் அலர்ட் என்பதெல்லாம் சுத்தமான வடிகட்டியப் பொய்.

சென்னைக்கு மழை கிடைக்க மற்றுமொரு சிறந்த காரணமும் இருக்கிறது. நான் அடுத்து வரும் ஒரு சில நாட்கள் சென்னையில் இருந்து வெளியே செல்கிறேன். சில சமயங்களில் இந்த விஷயம் தோற்றுவிடும். ஆனால், எப்போதெல்லாம் நான் வெளியூர் செல்கிறேனோ, அப்போதெல்லாம் சென்னையில் நல்லதொரு மழை பெய்திருக்கிறது.

மழையை ரசித்து, மகிழ்ந்திருங்கள். மழை பெய்ய ஆரம்பித்ததும் என்னால் பதிவிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அடுத்து வரும் 4 முதல் 5 நாட்கள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com