நீட் பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 நீட் பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நீட் பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


 நீட் பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரணர் இயக்க தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து சாரணர் இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினார். 
 இதையடுத்து  அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்தாண்டு முதல் சாரணர் இயக்க மாணவர்களுக்கு சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து உயர்ந்தால் பகுதிநேரஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள். 
பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக்கயிறு கட்டுவது குறித்த சுற்றறிக்கை விவகாரத்தில் அரசின் கருத்து தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. 
எது நடைமுறையில் இருக்கிறதோ அதைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்  அரசின் கொள்கை.  தமிழகம் முழுவதும் இலவச நீட் பயிற்சிக்கு 20 ஆயிரம் பேர்  விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com