தொடர் பயிற்சிகள் மூலம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெளிவு கிடைத்துள்ளது: அமைச்சர் டி. ஜெயக்குமார்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான தொடர் பயிற்சிகள் மூலமாக அந்தச் சட்டம் குறித்து அரசு ஊழியர்களுக்கு தெளிவு கிடைத்துள்ளது என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்
 தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான அனைத்து அரசு ஆணைகளின் தொகுப்பு புத்தகத்தை நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட, அதைப் பெறுகிறார்  திருவள்ளுர் மாவட்ட கல்வி அலுவலர்
 தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான அனைத்து அரசு ஆணைகளின் தொகுப்பு புத்தகத்தை நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட, அதைப் பெறுகிறார்  திருவள்ளுர் மாவட்ட கல்வி அலுவலர்


தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான தொடர் பயிற்சிகள் மூலமாக அந்தச் சட்டம் குறித்து அரசு ஊழியர்களுக்கு தெளிவு கிடைத்துள்ளது என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். 

தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான உத்தரவுகள் அடங்கிய தொகுப்பு புத்தகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சி அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. அதில், தகவல் பெறும் உரிமைச் சட்ட உத்தரவுகளின் தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு அமைச்சர் ஜெயக்குமார் பேசியது:-
தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, தங்களது மனுக்களின் மீது எத்தகைய நடவடிக்கைகளை அரசு அலுவலகங்கள் எடுத்துள்ளன என்பதை பொது மக்கள் அறிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வும் உருவாகியுள்ளது.
அரசுத் துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்களும், தங்களுக்கான கடமைகளையும், சமூகப் பொறுப்புகளையும் உணர்ந்து தங்களது பணிகளை காலவரம்புக்குள் செய்து முடிக்கும் வரம்புக்குள் வந்துள்ளனர். இதன்மூலம் அரசின் நலத் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களைச் சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ.100 விலையில் புத்தகம்: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை மக்களும், அரசு அலுவலர்களும் தொடக்க காலத்தில் அறிந்திருக்கவில்லை. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மௌன யுத்தங்கள் நடைபெற்று வந்தன. இப்போது தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டதால் அதுகுறித்த அச்சம் நீங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அந்தச் சட்டம் குறித்து தெளிவு ஏற்பட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பாக, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசு உத்தரவுகளின் தொகுப்பு புத்தகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகமானது ரூ.100 விலையில் தனி நபர்களுக்கும், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களுக்கும் கிடைக்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநர் வெ.இறையன்பு, கூடுதல் இயக்குநர் ஷோபா, இணை இயக்குநர் ச.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com