நிலவின் சுற்றுவட்டப் பாதையை இன்று சென்றடைகிறது சந்திரயான்-2

புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவை நோக்கி 6 நாள்களாக பயணித்து வரும் சந்திரயான்-2, நிலவின் சுற்றுவட்டப் பாதையை செவ்வாய்க்கிழமை சென்றடைய உள்ளது.
நிலவின் சுற்றுவட்டப் பாதையை இன்று சென்றடைகிறது சந்திரயான்-2


புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவை நோக்கி 6 நாள்களாக பயணித்து வரும் சந்திரயான்-2, நிலவின் சுற்றுவட்டப் பாதையை செவ்வாய்க்கிழமை சென்றடைய உள்ளது.

விண்கலத்தின் இந்த சாதனைப் பயணம் இந்திய மக்களிடையே மட்டுமின்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், 22 நாள்கள் புவி சுற்றுப்பாதையில் சுற்றிவந்தது. கடந்த புதன்கிழமை நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. ஆறு நாள்களாக இந்தப் பயணத்தைத் தொடர்ந்த விண்கலம், நிலவின் சுற்றுவட்டப் பாதையை செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் சென்றடைய உள்ளது.

அதன் பின்னர், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் விண்கலம், செப்டம்பர் 1-ஆம் தேதி வரை படிப்படியாக 4 முறை சுற்றுவட்டப் பாதையின் அளவு குறைக்கப்பட்டு, இறுதியாக நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவிலான சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் விண்கலம் நிறுத்தப்படும்.
பின்னர், செப்டம்பர் 2-ஆம் தேதியன்று விண்கலத்தின்  ஆர்ப்பிட்டரிலிருந்து லேண்டர் (விக்ரம்) பிரிக்கப்படும். 
அவ்வாறு பிரிக்கப்படும் லேண்டர் அமைப்பு தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றி வரும். அப்போது இரண்டு முறை அதன் சுற்றுவட்டப் பாதை அளவு குறைக்கப்பட்டு, இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com