பீட்டர், இந்திராணி முகர்ஜியை சந்தித்ததில்லை: கார்த்தி சிதம்பரம்

பீட்டர் முகர்ஜியையோ அல்லது அவரது மனைவி இந்திராணி முகர்ஜியையோ சந்தித்ததில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான
பீட்டர், இந்திராணி முகர்ஜியை சந்தித்ததில்லை: கார்த்தி சிதம்பரம்


பீட்டர் முகர்ஜியையோ அல்லது அவரது மனைவி இந்திராணி முகர்ஜியையோ சந்தித்ததில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறினார். மேலும், தனது தந்தை சிதம்பரத்தைக் கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

 ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தில்லியில் சிபிஐ அதிகாரிகளால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தில்லியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

சிபிஐ எனது தந்தையை மட்டும் குறிவைத்து கைது செய்யவில்லை. இதை காங்கிரஸ் கட்சியின் மீதான நடவடிக்கையாகவே பார்க்கிறேன். மத்தியப் புலனாய்வுத் துறை முன், எனது தந்தை ஆஜராவதற்கான சட்டத் தேவையும் எழவில்லை. 
இந்த விவகாரத்தில் அவர் தலைமறைவாகவும் இருக்கவில்லை. சிபிஐ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு ஏதும் செய்ய முடியவில்லை. என்னுடைய தந்தை மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு சட்ட முகாந்திரம் இல்லாதது. ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.
 20 முறை சிபிஐ எனக்கு விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. நான்கு தடவை எனது இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. இதுபோன்று சோதனை யாரிடமும் நடத்தப்பட்டதில்லை. ஆனால், அவர்களால் இன்னும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றார் அவர்.

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் சம்பந்தப்பட்ட பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜியின் தொடர்பு குறித்து கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இருவரையும் எனக்குத் தெரியாது. அவர்களை ஒருபோதும் சந்தித்ததும் இல்லை. பைகுல்லா சிறையில் சிபிஐ விசாரணையின் போதுதான் இந்திராணி முகர்ஜியை சந்தித்தேன். வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியத்தில் யாரையும் சந்தித்தது இல்லை. அதன் நடைமுறைகள் எனக்குத் தெரியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com