நான் வெளிநாடு செல்வதை மட்டும் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவது ஏன்? - முதல்வர் பழனிசாமி கேள்வி

நான் வெளிநாடு செல்வதை மட்டும் கொச்சைப்படுத்தி வரும் ஸ்டாலின், அவர் மட்டும்  அடிக்கடி வெளிநாடு செல்லும் மர்மம் என்ன? என
நான் வெளிநாடு செல்வதை மட்டும் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவது ஏன்? - முதல்வர் பழனிசாமி கேள்வி


சென்னை: நான் வெளிநாடு செல்வதை மட்டும் கொச்சைப்படுத்தி வரும் ஸ்டாலின், அவர் மட்டும்  அடிக்கடி வெளிநாடு செல்லும் மர்மம் என்ன? என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.  

அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாள்கள் பயணமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 28) காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து ஏமிரேட்ஸ் விமானம் மூலம் துபை செல்கிறார். இதன்பின் அங்கியிருந்து லண்டன் செல்லவுள்ளார்.

அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோர் செல்கின்றனர். 

முதல்வரின் பயணம் வெற்றிகரமாக அமைய பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேரிலும், அறிக்கைகள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன், அமெரிக்கா மற்றும் துபை ஆகிய நாடுகளுக்குச் செல்லும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கு தொழிலதிபர்களை சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார். தமிழ் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்று பேசிகிறார். பின்னர் தனது 14 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில், வெளிநாடு செல்வதற்காக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் வந்த முதல்வர் பழனிசாமி தனது வெளிநாடு பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறேன். நான் தொழிலபதர் இல்லை. சாதாரண விவசாயி. நான் நேரில் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு விடுத்தால் தமிழக்ததில் தொடங்க வருவார்கள். 

மேலும், தமிழகம் அனைத்து அம்சங்களும் உள்ள மாநிலம், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனேயே தொழிற்சாலைகள் இங்கு வந்துவிடாது என்று கூறினார். 

மேலும், நான் வெளிநாடு செல்வதை மட்டும் கொச்சைப்படுத்தி வரும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், அவர் மட்டும் அடிக்கடி வெளிநாடு செல்லும் மர்மம் என்ன? என கேள்வி எழுப்பினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com