ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தமிழக அரசின் இலவச பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்..

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளில் சேருவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி வருகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தமிழக அரசின் இலவச பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்..

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளில் சேருவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி வருகிறது.

இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகள் உள்ளன. 2020-21ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு 2020ம் ஆண்டு மே 31ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்தப் பயிற்சி மையத்தில் தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு இலவசமாகப் பயிற்சி அளிப்பதோடு, தங்குமிடம், உணவு, நூலகம் போன்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், முதல்நிலைத் தேர்வில் தேர்வாகி முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சியோடு மாதம் ரூ.3,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், 2020-21ம் ஆண்டுக்கான பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மீன்வளம் மற்றும் பணியாளர் & நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அகில இந்திய குடிமைப்பணிகளில் சேர மத்திய தேர்வாணையக்குழு முதல்நிலைத் தேர்வுகளை 31.05.2020ல் நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வுகளில் வெற்றி பெற தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டதாரி/ முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசு, கட்டணம் ஏதுமின்றி ஆறு மாத காலம் உண்டு, உறைவிடப் பயிற்சியை அளிக்கிறது. இப்பயிற்சி சென்னை, ராஜா அண்ணாமலை புறத்தில் உள்ள 'அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் அளிக்கப்படும். 

ஆர்வமும், தகுதியும் உள்ள தமிழக இளைஞர்கள் இப்பயிற்சியினைப் பெற்று வெற்றி பெற அழைக்கப்படுகிறார்கள். இப்பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு 13.10.2019 அன்று தமிழகத்தில் 20 மையங்களில் நடைபெறும். 

இணையதள வழி விண்ணப்பிக்க கடைசி நாள் 16.09.2019 (மாலை 6 மணி) ஆகும். கூடுதல் தகவல்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் காணலாம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com