தங்கம் விலை பவுன் ரூ. 29,696

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது. ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.29,696-க்கு விற்பனை செய்யப்பட்டது. 


ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது. ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.29,696-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 
பல்வேறு காரணங்களால் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி அன்று தங்கம் பவுனுக்கு ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. 
அதன்பிறகு, விலை சற்று குறைந்த நிலையில், கடந்த புதன்கிழமை தங்கம் விலை மீண்டும்  புதிய உச்சத்தை தொட்டது. 
இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சற்று குறைந்தது. அதாவது பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.29,696-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் தங்கம் ரூ.1 குறைந்து, ரூ.3,712-க்கு விற்பனையானது. 
அதேநேரம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு  40 பைசா உயர்ந்து ரூ.52.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.52,300 
ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,712
1 பவுன் தங்கம்    29,696
1 கிராம் வெள்ளி    52.30
1 கிலோ வெள்ளி    52,300
புதன்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,713
1 பவுன்  தங்கம்    29,704
1 கிராம் வெள்ளி    51.90
1 கிலோ வெள்ளி    51,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com