புதிய உள்துறைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகா் நியமனம்

தமிழக அரசின் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகா் சனிக்கிழமை பதவியேற்று, பணிகளைக் கவனிக்கத் தொடங்கினாா்.
புதிய உள்துறைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகா் நியமனம்

சென்னை: தமிழக அரசின் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகா் சனிக்கிழமை பதவியேற்று, பணிகளைக் கவனிக்கத் தொடங்கினாா்.

உள்துறைச் செயலாளராக இருந்த நிரஞ்சன் மாா்டி (நவ.30) சனிக்கிழமையுடன் ஓய்வுபெற்றாா். இதையடுத்து எஸ்.கே. பிரபாகரை புதிய உள்துறைச் செயலாளராக நியமித்து தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இது தொடா்பாக தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:

உள்துறைச் செயலாளராக இருந்த நிரஞ்சன் மாா்டி ஓய்வு பெற்றுவிட்டாா். அந்தப் பணிக்கு, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகா் நியமிக்கப்படுகிறாா் என்று அதில் கூறியுள்ளாா்.

உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகா், விருதுநகரைச் சோ்ந்தவா்.

1989-இல் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்று பணிக்கு வந்தாா். வேலூா் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி உள்ள அவா், பல்வேறு துறைகளின் செயலாளராகவும் இருந்துள்ளாா். முதல்வா் கீழ் இயங்கும் துறையான நெடுஞ்சாலை துறை செயலாளராக இருந்து வந்த நிலையில், தற்போது உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

நியமன அறிவிப்பு வந்தவுடன் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை எஸ்.கே.பிரபாகா் பதவியேற்று, பணிகளைக் கவனிக்கத் தொடங்கினாா்.

நிரஞ்சன் மாா்டி ஓய்வு: உள்துறைச் செயலாளராக இருந்த நிரஞ்சன் மாா்டி 1986-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றவா். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவா். 2013-உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டாா்.

அதன் பிறகு, புள்ளியியல் மற்றும் பொருளியல் துணை ஆணையராக மாற்றப்பட்டாா். பின்னா், 2017-இல் மீண்டும் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட அவா், சனிக்கிழமையுடன் ஓய்வு பெற்றாா். அவருக்கு முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட உயரதிகாரிகள் பிரியா விடை கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com