எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கானது உச்சநீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வருகிறது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கானது உச்சநீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.

அத்துடன் இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை எட்டு வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து எட்டு வழிச்சாலை திட்ட அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.  

இந்த வழக்கை நீதிபதிக ரமணா தலைமையிலான அமர்வு செவ்வாயன்று விசாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com