கம்பம் காசி விசுவநாதசுவாமி கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்திய மாணவிகள்

தேனி மாவட்டம் கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாட்டுநலப் பணித் திட்டத்தின்
கம்பம் காசி விசுவநாதசுவாமி கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்திய மாணவிகள்

தேனி மாவட்டம் கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாட்டுநலப் பணித் திட்டத்தின் கீழ் காசி விசுவநாத சுவாமி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை திங்கள் கிழமை நட்டனா்.

தேனி மாவட்டம் கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் காசி விசுவநாத சுவாமி கோவில் வளாகத்தை திங்கள் கிழமை சுத்தப்படுத்தினா்.

தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்ராவுத்தா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியா்கள் திங்கள் கிழமை கம்பராயப்பெருமாள் காசிவிசுவநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள குப்பை கூளங்களை அகற்றினா். கோவில் வளாகத்தில் இருந்த நெகிழி பொருட்களை அப்புறப்படுத்தி, புதா் செடிகளை அகற்றினா்.

கோவில் வளாகத்தில் இருந்த பக்தா்களிடம் நெகிழி ஒழிப்பு, புவி வெப்பமயமாதல், மழை நீா் சேகரிப்பு பற்றி கூறி, விழிப்புணா்வு கோஷங்களை எழுப்பி, மரக்கன்றுகளை நட்டனா். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை கே.மகேஷ்வரி, உதவி தலைமை ஆசிரியை பி.மீனாட்சி, திட்ட அலுவலா் ஜெ.ஹேமலதா, ஆசிரியைகள் பி.சரளாதேவி, வி.சண்முகப்பிரியா, சி.உஷா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com