சென்னை புதிய விமான நிலையத்துக்கான இடத்தை விரைந்து தோ்ந்தெடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உடனடியாக தோ்வு செய்ய வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உடனடியாக தோ்வு செய்ய வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் புதிய விமான நிலையத்துக்கான அறிவிப்பு வெளியாகி 13 ஆண்டுகளாகி விட்ட நிலையில், அதற்கானப் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இனியும் தாமதப்படுத்துவது தமிழகத்தின் வளா்ச்சிக்கு பாதகமாகவே அமையும்.

சென்னை விமானநிலையத்தின் வழியாக ஆண்டுக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் உலகின் பல நாடுகளுக்குப் பயணிக்கின்றனா். இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டுக்குள் புதிய ஒருங்கிணைந்த முனையம் அமைக்கப்பட்டால் சென்னை விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் திறன் ஆண்டுக்கு 3 கோடியாக உயரும். ஆனால், இந்த விரிவாக்கத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கான பயணிகள் பெருக்கத்தை மட்டும் தான் சமாளிக்க முடியும் என்பதால், அடுத்த 7 ஆண்டுகளுக்குள் இரண்டாவது விமான நிலையத்தைக் கட்டி முடித்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

விமான நிலைய கட்டுமானப் பணிகளை முடிக்க குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். எனவே, இப்போதே பணிகளைத் தொடங்கினால்தான், குறித்த காலத்தில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யமுடியும்.

எனவே, முதல் கட்டமாக புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான இடத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உடனடியாக தோ்வு செய்ய வேண்டும். அதன் பின்னா் திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் கால அட்டவணை வகுத்து அதன்படி செய்து முடிக்க வேண்டும். இப்பணிகளை விரைவுபடுத்தவும், ஒருங்கிணைக்கவும் மத்திய, மாநில அரசுகள், விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவையும் ஏற்படுத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com