14 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை ஐஐடியில் 2006ஆம் ஆண்டு முதல் நடந்த 14 மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை ஐஐடியில் 2006ஆம் ஆண்டு முதல் நடந்த 14 மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவா், கடந்த நவம்பா் 9-ஆம் தேதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடா்பாக விடுதிக் காப்பாளா் லலிதாதேவி அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூா்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கு சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இதனிடையே சென்னை ஐஐடியில் 2006 முதல் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே அந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணியின் தேசிய தலைவரான கேரளா கோழிக்கோட்டைச் சேர்ந்த சலீம் மடவூர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மாணவர்களின் தற்கொலைகள் ஐஐடி வளாகங்களில் மட்டும் தான் நடைபெறுகிறதா என சந்தேகம் எழுப்பிய நீதிபதகள், பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை ஏன் சிபிசிஐடிக்கு மாற்றக் கூடாது என அரசிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com