சுவர் இடிந்து 17 பேர் பலியான விவகாரம்: போராடி கைது செய்யப்பட்டவர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

மேட்டுப்பாளையத்தில் திங்களன்று சுவர் இடிந்து 17 பேர் பலியான விவகாரத்தில் போராடி கைது செய்யப்பட்டவர்களுக்கு, 15 நாள் நீதிமன்றத் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் போராட்டம்
மேட்டுப்பாளையம் போராட்டம்

மதுக்கரை: மேட்டுப்பாளையத்தில் திங்களன்று சுவர் இடிந்து 17 பேர் பலியான விவகாரத்தில் போராடி கைது செய்யப்பட்டவர்களுக்கு, 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் திங்களன்று சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். 

சுமார் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகளுக்குப் பின் 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. பின்னர் அவர்களது சடலங்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஒரே நேரத்தில் 17 சடலங்களை பிரேத பரிசோதனை செய்ய வசதிகள் இல்லை எனக் கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து மருத்துவமனை முன்பு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். 

அதன் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், செவ்வாயன்று  24 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 15 நாள் நீதிமன்றக்  காவல் விதிக்கப்பட்டுள்ளது. கைதான 24 பேர்களையும் சிறையில் அடைக்க மதுக்கரை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com