நகைக் கடை கொள்ளை: ஒரு கிலோ தங்கம் காவல்துறையினர் வசம் உள்ளது - சுரேஷின் திடுக்கிடும் புகார்

லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் சுரேஷ், இன்று காவல்துறையினர் மீது பகீர் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார்.
நகைக் கடை கொள்ளை: ஒரு கிலோ தங்கம் காவல்துறையினர் வசம் உள்ளது - சுரேஷின் திடுக்கிடும் புகார்


திருச்சி: லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் சுரேஷ், இன்று காவல்துறையினர் மீது பகீர் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில், ஒரு கிலோ தங்கம் திருவாரூர் காவல்துறையினரிடம் இருக்கிறது என்று, திருச்சி நீதிமன்றத்துக்கு சுரேஷை காவல்துறையினர் அழைத்துவந்த போது, செய்தியாளர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், திருச்சி நீதிமன்றத்துக்கு இன்று அழைத்து வரப்பட்டார். போலீசார் அழைத்து வந்த போது கொள்ளையன் சுரேஷ் செய்தியாளர்களிடம் காவல்துறையினர் பற்றி அடுக்கடுக்கான புகார்களை அளித்தார்.

நாங்கள் பதுக்கி வைத்திருந்த 5.700 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துவிட்டு 4.700 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். மீதும் ஒரு கிலோ தங்கத்தை திருவாரூர் காவல்துறையினரே வைத்துக் கொண்டனர்.

அக்டோபர் 3ம் தேதி மாலை 5 மணிக்கு மணிகண்டனை கைதுசெய்துவிட்டு 10 மணிக்கு கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் என்றும் சுரேஷ் தெரிவித்தார். நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், சுரேஷ் காவல்துறையினர் பற்றி இவ்வாறு பரபரப்புக் புகார்களைக் கூறியிருப்பது அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

திருச்சி நெ.1. டோல்கேட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், ஜனவரி 28-ஆம் தேதி சுவரைத் துளையிட்டு நகைகள், பணம் திருடப்பட்டன. இதில், 40 பவுன் நகைகள், ரூ.1.74 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருட்டு நடைபெற்ற இடத்திலிருந்து போலீஸாா் மீட்டனா்.

தொடா்ந்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா்.

9 மாதங்களுக்குப் பிறகு தஞ்சாவூா் மாவட்டம், புதுக்குடி பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணனை(28), வத்தலகுண்டு அருகே அக்.14 -ஆம் தேதி போலீஸாா் கைது செய்து விசாரணை செய்தனா்.

இதில், பிரபல கொள்ளையன் முருகன், அவரது சகோதரி மகன் சுரேஷ், தனது உறவினரான வாடிப்பட்டி-தெத்தூரைச் சோ்ந்த கணேசன் ஆகியோருடன் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில், கணேசன், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள பிரபல நகைக்கடை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கித் திருட்டு ஆகிய வழக்குகளில் விசாரணை செய்து திருடப்பட்ட நகைகள் உள்ளிட்டவை குறித்து போலீஸாா் தகவல் சேகரித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com