சூடான் தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 23 பேர் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது: வைகோ

சூடான் தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 23 பேர் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சூடான் தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 23 பேர் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
சூடான் நாட்டுத் தலைநகர் கார்டோமில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலையில் பணி செய்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், வெங்கடாசலம், ராஜசேகர் ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், ஜெயக்குமார், முகமது சலீம், பூபாலன் உள்ளிட்ட 130 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் ஜெயக்குமார் என்பவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வருகின்ற தகவல்கள் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருகின்றது.

தீ விபத்தில் சிக்கியவர்களின் நிலையை அறிய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் என்றும், தீ விபத்து குறித்த தகவல்களைப் பெற சிறப்புத் தகவல் மையமும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியத் தூதரகம் விரைந்து செயல்பட்டு, தீ விபத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் உடல்களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com