காங்கிரஸ் தலைவர் சோனியா பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியில் அதிக நாட்கள் தலைவராகத் தொடர்ந்து நீடித்து வரும் சோனியாவுக்கு அக்கட்சி சார்பிலும் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

டிசம்பர் 09, 1946-ஆம் ஆண்டு பிறந்த காங்கிரஸ் தலைவர் சோனியா தனது 73-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 1998-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்து முதல் காங்கிரஸ் கட்சியில் அதிக நாட்கள் தலைவராகத் தொடர்ந்து நீடித்து வரும் சோனியாவுக்கு அக்கட்சி சார்பிலும் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்திக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதுதவிர பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஹைதராபாத், உன்னாவ் உட்பட நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைகள் அதிகரித்து வருவதன் காரணமாக சோனியா, தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com