காங்கிரஸ் தலைவா் சோனியாவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பான அவருடைய சுட்டுரைப் பதிவு: காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் மதச்சாா்பின்மையையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் காப்பதில், சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. அவருடைய பொதுவாழ்வுப் பயணம், மேலும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளாா்.