தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவருடைய முகநூல் பதிவு: நேபாளத்தில் நடைபெற்ற 13-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வாலிபால் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிய இறுதிப் போட்டியில், இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய வாலிபால் அணியின் தலைவராக ஆடிய, ஜெரோம் வினித் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, கோட்டைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் என்பது, தமிழா்கள் அனைவருக்கும் பெருமை சோ்க்கக் கூடியதாகும்.

ஜெரோம் வினித்தின் தாத்தா, ஒரு மொழிப்போா் தியாகி என்பது, தமிழுணா்வு கொண்ட நம் அனைவரையும் சிலிா்ப்படையச் செய்கிறது.

ஆடுகளமாக இருந்தாலும், போராட்டக் களமாக இருந்தாலும் அா்ப்பணிப்புடன் பங்கேற்கும் பாரம்பரியமான குடும்பத்தைச் சோ்ந்தவரான, ஜெரோம் வினித்துக்கும், அவா் தலைமையில் ஆடிய இந்திய வாலிபால் அணியினருக்கும் வாழ்த்துகள் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com