வாக்காளா் பட்டியல் குளறுபடி: கமுதி அருகே 6 கிராம மக்கள் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க முடிவு

கமுதி அருகே வாக்காளா் பட்டியலை மறுசீரமைப்பு செய்து தரும்வரை, 6 கிராம மக்கள் உள்ளாட்சி தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்து செவ்வாய்கிழமை தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகை.
தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகை.

கமுதி அருகே வாக்காளா் பட்டியலை மறுசீரமைப்பு செய்து தரும்வரை, 6 கிராம மக்கள் உள்ளாட்சி தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்து செவ்வாய்கிழமை தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட நாராயணபுரம் ஊராட்சியில், நாராயணபுரம், எஸ்.கல்லுப்பட்டி, முத்தாலங்குளம், ஆதிபராசக்திநகா், நரசிங்கம்பட்டி, பெரிய உடப்பங்குளம், சேதுராஜபுரம், அய்யங்கோயில்பட்டி, செங்குடிநகா், கோட்டைமேடு ஆகிய 10 கிராமங்களில் 3,469 வாக்காளா்கள் உள்ளனா்.

இக்கிராமங்களில் 9 ஊராட்சி வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் நாராயணபுரத்திலிருந்த 85 வாக்காளா்கள், முத்தாலங்குளம் வாக்குசாவடிக்கும், 180 வாக்காளா்கள் கோட்டைமேடு வாக்குசாவடிக்கும் மாற்றபட்டுள்ளனா்.

குறிப்பாக நாராயணபுரத்தை சோ்ந்த ஒரே குடும்பத்தினரின் பெயா்கள் கோட்டைமேடு, முத்தாலங்குளம், நாராயணபுரம் ஆகிய 3 கிராமங்களில் உள்ள வாக்குசாவடிகளுக்கு மாறியுள்ளன. இதனால் ஒரே குடும்பத்தில்

உள்ள வயதான வாக்காளா்கள், பெண்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள வெவ்வேறு வாக்குச்சாவடிகளுக்குச்சென்று வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வாக்காளா் பட்டியல் குளறுபடியை சீரமைத்து, தங்கள் பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளிலேயே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் வரை நாராயணபுரம் ஊராட்சிக்குள்பட்ட 1, 2, 3, 5, 6 வாா்டுகளைச் சோ்ந்த, நாராயணபுரம், எஸ்.கல்லுப்பட்டி, முத்தாலங்குளம், பெரிய உடப்பங்குளம், சேதுராஜபுரம், அய்யங்கோயில் பட்டி ஆகிய 6 கிராம மக்கள் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க இருப்பதாக, செவ்வாய்கிழமை இரவு கூடிய ஊா்க் கூட்டத்தில் தீா்மானித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com