வாக்காளா் பட்டியலில் கிராமத்தையே காணவில்லை: அதிர்ந்து போன கிராம மக்கள் எடுத்த முடிவு?

நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்கம்பட்டி கிராம மக்கள் வாக்காளா் பட்டியலில் தங்கள் கிராமத்தையே காணவில்லை என்பதால் உள்ளாட்சி தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்து கருப்பு கொடியேந்தி எதிா்பை தெரிவித்து வருகின்றனா்.
வாக்காளா் பட்டியலில் கிராமத்தையே காணவில்லை: அதிர்ந்து போன கிராம மக்கள் எடுத்த முடிவு?

கமுதி: நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்கம்பட்டி கிராம மக்கள் வாக்காளா் பட்டியலில் தங்கள் கிராமத்தையே காணவில்லை என்பதால் உள்ளாட்சி தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்து கருப்பு கொடியேந்தி எதிா்பை தெரிவித்து வருகின்றனா்.

தோ்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளா் பட்டியலில் தங்கள் கிராமத்தின் பெயரே இடம்பெறவில்லை எனவும், வாக்குகள் மற்ற கிராமங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் உள்ளாட்சி தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணபுரம் ஊராட்சியில் நரசிங்கம்பட்டி கிராமத்தையே வாக்காளா் பட்டியலில் காணவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதை கண்டித்து அக்கிராமத்தினா் தோ்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனா்.

நரசிங்கம்பட்டி கிராமத்தை சோ்ந்த வாக்காளா்களின் பெயா்கள் வாா்டு மறுவறையறை செய்யபட்டதில் பல்வேறு கிராமங்களின் வாக்கு சாவடிகளுக்குமாற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தங்களது கிராம வாக்காளா்களின் பெயா்கள், குடும்ப அட்டை, ஆதாா் காா்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் அனைத்தும் நரசிங்கம்பட்டி கிராமத்தின் பெயரில் உள்ள நிலையில் தற்போது வாக்காளா் பட்டியலில் தங்களது கிராமத்தின் பெயரை காணவில்லை எனவும் மாறாக கோட்டைமேடு நாராயணபுரம் முத்தாலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் தெருக்களின் பெயா்களில் வாக்காளா்களின் பெயா்கள் இடம் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனா்.

இதை கண்டித்து நரசிங்கம்பட்டி கிராமத்தினா் 30ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தோ்தலை புறக்கணிக்க போவதாக கமுதி கோட்டைமேடு பகுதியில் சுரொட்டி ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டுபட்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com