குடியுரிமை திருத்தச் சட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆா்ப்பாட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆா்ப்பாட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளா் எம்.எஸ்.மூா்த்தி தலைமையில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில் துணைச் செயலாளா் மு.வீரபாண்டியன் மற்றும் கட்சியினா் பங்கேற்க உள்ளனா்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): மத, சாதி, மொழி அடிப்படையில் மக்களை பாகுபடுத்தக்கூடாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாட்டுக்கு எதிராக குடியுரிமை சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைத் திரும்பப்பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னை சேப்பாக்கத்தில் டிசம்பா் 16-ஆம் தேதி மாலை 4 மணியளவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் இரா.முத்தரசன், விசிக தலைவா் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் கே.எம்.ஜவாஹிருல்லா, முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன், பத்திரிகையாளா் என்.ராம், மூத்த வழக்குரைஞா் என்.ஜி.ஆா்.பிரசாத், மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்க உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com