50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மேலோங்கும் தமிழுணர்வு: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர்

கடந்த 50 ஆண்டுகளாக நீர்த்துப் போன தமிழ் உணர்வு தற்போது மீண்டும் மேலோங்கி வருவதாக தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மேலோங்கும் தமிழுணர்வு: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர்

கடந்த 50 ஆண்டுகளாக நீர்த்துப் போன தமிழ் உணர்வு தற்போது மீண்டும் மேலோங்கி வருவதாக தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
 காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் மற்றும் "ஆர்' அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் சார்பில் 15 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொ) எம்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். கருத்தரங்கை தொடங்கி வைத்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் சிறப்புரை நிகழ்த்தி பேசியதாவது:
 தற்போது ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளபோதும், வேலைவாய்ப்பு கிடைக்காத சூழல் உள்ளது. இளைய தலைமுறையிடமுள்ள நல்ல சிந்தனை வெளியுலகத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஆய்வுக்கான வாய்ப்புகள் அதிகம் உருவாக்கப்பட்டுள்ளன. அதனை பயன்படுத்தி தமிழ் சமூகத்திற்கு பயன்படும் வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ள இளைய சமுதாயம் முன் வர வேண்டும்.
 தமிழ் இலக்கியத்திற்கு இணையாக வேறு எந்தமொழியிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. வேர் சொற்களை பாதுகாத்து வரும் ஒரே மொழி தமிழ் மட்டுமே. வேர் ஆழமாகவும், பாதுகாப்பாகவும் உள்ள காரணத்தால், 2 ஆயிரம் ஆண்டுகளாக யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத பலத்துடன் தமிழ் மொழி உள்ளது.
 தமிழன் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும் தமிழர்கள் தமிழோடு நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
 கடந்த 50 ஆண்டுகளாக நீர்த்துப் போன தமிழ் உணர்வு, தற்போது மீண்டும் மேலாங்கி வருகிறது. தமிழர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல் போனால், சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதிகளாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். தமிழ் வளர்ச்சி மூலமாகவே தமிழ் சமூகம் உயர்வு பெறும் என்றார்.
 நிகழ்ச்சியில் கொடைக்கானல் அன்னைத் தெரசா தமிழ்த்துறை முன்னாள் தலைவர் தாயம்மாள் அறவாணன், சிங்கப்பூர் "ஆர்' ஆட்சிக்குழு நிர்வாகி ரத்தின வேங்கடேசன், புதுச்சேரி "ஆர்' ஆட்சிக்குழு நிர்வாகி சிலம்பு நா.செல்வராசு, காந்தி கிராம தமிழ்த்துறை பேராசிரியர் ஓ.முத்தையா, ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் பொ.ந.கமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com