திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பல மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டு விட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பல மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டு விட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
 இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த மாவட்ட திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.
 இதுவரை திருவண்ணாமலை, திருச்சி, கரூர், சேலம், கோவை, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமுக முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கழகங்களின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைந்து அந்தந்த மாவட்ட திமுக சார்பில் பட்டியல் வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com