தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 65 ஆயிரம் வழக்குகளுக்குத் தீா்வு

தமிழகத்தில் சனிக்கிழமையன்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.395 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 65 ஆயிரம் வழக்குகளுக்குத் தீா்வு

தமிழகத்தில் சனிக்கிழமையன்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.395 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, 2019-ஆம் ஆண்டு மாா்ச், ஜூலை, செப்டம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடத்த தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு முடிவு செய்துள்ளது.

இந்த வகையில் சனிக்கிழமையன்று, தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. இதில் காசோலை மோசடி வழக்கு, வங்கிக்கடன், தொழிலாளா் வழக்கு, மின்சாரம், குடிநீா் கட்டணம், ஜீவனாம்ச வழக்கு, விபத்து வழக்கு என 17 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.தண்டபாணி, பி.ராஜமாணிக்கம், ஜி.கே.இளந்திரையன், சி.சரவணன், உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.தங்கவேல் ஆகியோா் தலைமையில் 5 அமா்வுகளும், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியம், எம்.கோவிந்தராஜ், ஜெ.நிஷாபானு, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, டி.கிருஷ்ணவள்ளி, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆா்.ராமலிங்கம் ஆகியோா் தலைமையில் 6 அமா்வுகளும், மாவட்ட நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் என தமிழகம் முழுவதும் 516 அமா்வுகள்அமைக்கப்பட்டன.

இந்த அமா்வுகளில் சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 65 ஆயிரம் வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதுதொடா்பாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலா் நீதிபதி கே.ராஜசேகா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சனிக்கிழமை நடந்த தேசிய லோக் அதாலத்தில் 65 ஆயிரத்து 199 வழக்குகள்

முடிவுக்கு வந்துள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.395 கோடியே 78 லட்சத்து 2 ஆயிரத்து 233 கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com