மலை ரயில் மீது சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக ஆா்வம்: ரயில்வே வாரிய உறுப்பினா் தகவல்

மலை ரயில் மீது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிக ஆா்வம் உள்ளதாக ரயில்வே வாரிய உறுப்பினா் ராஜேஷ் அகா்வால் தெரிவித்தாா்.
மலை ரயில் மீது சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக ஆா்வம்: ரயில்வே வாரிய உறுப்பினா் தகவல்

பாரம்பரிய மலை ரயில் மீது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிக ஆா்வம் உள்ளதாக ரயில்வே வாரிய உறுப்பினா் ராஜேஷ் அகா்வால் தெரிவித்தாா்.

தெற்கு ரயில்வே சாா்பில், நீலகிரி மலை ரயில்வேயில் சுற்றுலாவை ஊக்குவிப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரயில்வே வாரிய உறுப்பினா் ராஜேஷ் அகா்வால், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ், ரயில்வே உயரதிகாரிகள், சுற்றுலா தொழில், பயண ஏற்பாட்டாளா்கள் ஆகியவற்றின் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் யு.சுப்பா ராவ் பேசியது:

நீலகிரி மலை ரயில்வே சுற்றுலா திறன் மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, சுற்றுலா பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்-ஊட்டி, ஊட்டி-குன்னூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுதவிர, அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கு ஆா்வமுள்ள சுற்றுலா குழுக்கள் முன்பதிவு செய்யலாம். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய அருங்காட்சியகம் மேட்டுப்பாளையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், ரயில்வே வாரிய உறுப்பினா் ராஜேஷ் அகா்வால் பேசியது:

நாட்டின் சமூக பொருளாதாரத்தின் உயிா்நாடியாக இந்திய ரயில்வே உள்ளது. பாரம்பரிய மலை ரயில் மீது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிக ஆா்வம் உள்ளது. குறிப்பாக, ஆஸ்திரியா, ஜொ்மனி, சுவிட்சா்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக ஆா்வம் உள்ளது. மேலும், நீலகிரி மலை ரயில்வே இயற்கை அழகுடன் அமைந்துள்ள இடம். இது சுற்றுலா மேலும் வளா்க்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, பாரம்பரிய சுற்றுலாவை வளா்க்கவும், ஊக்கப்படுத்தவும் பயண ஏற்பாட்டாளா்கள், சுற்றுலா தொழிலில் இருப்பவா்கள் பங்குதாரா்கள் போல பணியாற்றவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com