குடியுரிமைச் சட்டம்: எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்களையும் இலங்கை தமிழர்களையும் புறக்கணித்ததை கண்டித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்
குடியுரிமைச் சட்டம்: எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்களையும் இலங்கை தமிழர்களையும் புறக்கணித்ததை கண்டித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

திருப்பத்தூர் ஆலங்காயம் சாலையில் உள்ள பஜாரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மாவட்ட எஸ்பி.,பி.விஜயகுமார் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஐக்கிய முஸ்லீம் ஜமாஅத் கமிட்டி மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்ட திருத்தை கண்டித்து காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடி இஸ்லாமிய வியாபாரிகள் நல சங்கத்தினர் கடையடைப்பு செய்து போராட்டத்தில் பங்கேற்றனர். 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ கேஆர். ராமசாமி, முன்னாள் அமைச்சர்கள் கேஆர். பெரியகருப்பன், மு. தென்னவன், அமுமுக நிர்வாகி தேர்போகி பாண்டி, திரைப்பட இயக்குநர் கெளதமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள், இஸ்லாமிய பெண்கள் அமைப்பினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் அமைப்புகள் இணைந்து இன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் அய்யூப் கான் தலைமை வகித்தார். இஸ்லாமிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள்  ஜபருல்லா, ஷாஜகான், செல்லப்பா இப்ராஹிம், பாதுஷா மகரூப், குலாம் உசேன் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ராமலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள் அன்பழகன், கோவி செழியன், தலைமை இமாம் சவுக்கத் அலி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இஸ்லாமிய இயக்கங்கள் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இஸ்லாமிய அமைப்புகள் என பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதில் கட்சி சார்பற்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் 5,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் திரண்டனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்   சனிக்கிழமை நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும்,  போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீதான தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 
ஜமாஅத்துல் உலமா சபையினர் பெண்கள் சமூக ஆர்வலர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இதேபோல இந்திய மாணவர் சங்கத்தினர் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் காந்தி சிலை முன்பு கண்ணை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு அறவழிப் போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அநீதியை எதிர்க்கும் அனைத்துக் கட்சிக் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சின்னப்பா பூங்கா பகுதியில் சனிக்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் எஸ். சதக்கத்துல்லா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.ஏ. ஜாபர் அலி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது,

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நாட்டை சர்வாதிகார நாடாக, ஜெர்மனி போன்று மாற்ற முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியின் 4-ஆவது சம்மட்டி அடியாகத்தான் மக்கள் மீது இந்தச் சட்டம் திணிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மேலும் மேலும் சரிந்து கொண்டே வருகிறது. இப்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், மத்திய அரசுக்கும் எதிராக நடைபெறுவது என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி எம்எல்ஏ, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கேஎம். சரீப், முன்னாள் எம்எல்ஏ இராசு கவிதைப்பித்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் நியாஸ், ஆம் ஆத்மி மாவட்டத் தவைவர் எம். அப்துல்ஜப்பார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் முகமது அஷ்ரப் அலி, தமுமுக மாவட்டச் செயலர் எம். அப்துல்கனி, மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com