குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கியது

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணி சற்றுமுன் தொடங்கியது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கியது

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணி சற்றுமுன் தொடங்கியது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணியில் மதிமுக பொதுச் செயலர் வைகோ, தி.க. தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், கனிமொழி, தயாநிதி மாறன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்காணோர் க்லாந்து கொண்டுள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெறுகிறது. 

பேரணியின் காரணமாக 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படும் என காவல்துறை தகவல் அளித்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க 6 கலவர தடுப்பு வாகனங்கள், 3 தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று நடைபெறும் பேரணி, வழிநெடுகிலும் 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணியை காவல்துறையினர் மேறகொண்டுள்ளனர்.

பேரணி செல்லும் வழி நெடுகிலும் சுமார் 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் பேரணியை கண்காணித்து வருகிறார்கள்.

அதேப்போல 4 டிரோன் கேமராக்களையும், காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com