அலங்கோல ஆட்சியால் தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது: ஸ்டாலின்

அலங்கோல ஆட்சியால்  தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது என்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கோலப் போராட்டம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கோலப் போராட்டம் குறித்து ஸ்டாலின்
கோலப் போராட்டம் குறித்து ஸ்டாலின்

சென்னை: அலங்கோல ஆட்சியால்  தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது என்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கோலப் போராட்டம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஞாயிறன்று கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பெசன்ட் நகரில் தெருக்களில் மற்றும் சாலைகளில் பெண்கள் No to NRC, No to CAA என்ற வாசகங்களுடன் கோலமிட்டனர். தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 7 பெண்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களை விடுவித்தனர்.  தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் இத்தகைய கோலப்போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் அலங்கோல ஆட்சியால்  தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது என்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கோலப் போராட்டம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மாவுக் கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர்.

ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com