சாத்தூரில் வாக்காளர்களுக்கு அரிசிப் பை விநியோகம் செய்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முருகேசன் என்பவர் வாக்களிக்கும் மக்களுக்கு அரிசிப் பை விநியோகம் செய்தனர். 
சாத்தூரில் வாக்காளர்களுக்கு அரிசிப் பை விநியோகம் செய்ததால் பரபரப்பு


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முருகேசன் என்பவர் வாக்களிக்கும் மக்களுக்கு அரிசிப் பை விநியோகம் செய்ததால், போலீசார் கடை உரிமையாளரை அழைத்துச் சென்றனர். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கத்தாளம்பட்டி ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சாமியார் காலனி பகுதியைச் சேர்ந்த லட்சுமி முருகேசன் என்பவர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரது கணவர் முருகேசன் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் கத்தாளம்பட்டி ஊராட்சி மன்ற பகுதிக்குட்பட்ட அம்மாபட்டி பகுதி பொதுமக்களை தனக்கு வாக்களிக்க கோரியதுடன், வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசிப் பை டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. புதுமனை புகுவிழா அழைப்பிதழில் கீழே நம்பர் பிரிண்ட் செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசிப் பை டோக்கனை வைத்து சாத்தூரில் உள்ள ஒரு அரிசி கடையில் அம்மாபட்டி பொது மக்கள் அரிசி வாங்க மொத்தமாக திரண்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாக்காளர்கள் அரிசி வாங்க பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அந்த குறிப்பிட்ட அரிசி கடை உரிமையாளரை விசாரணைக்கு அழைத்துச் சென்றார். வரக்காளர்களுக்கு, வேட்பாளர் அரிசி விநியோகம் செய்தது சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com