சட்டப் பேரவை நாளை கூடுகிறது: நிதிநிலை அறிக்கை தாக்கல்

தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (பிப். 8) கூடுகிறது. அப்போது, 2019-2020-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை
சட்டப் பேரவை நாளை கூடுகிறது: நிதிநிலை அறிக்கை தாக்கல்


தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (பிப். 8) கூடுகிறது. அப்போது, 2019-2020-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். நிதிநிலை அறிக்கையில் பல்வேறு பிரதான அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
15-வது சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குக் கூடவுள்ளது. தமிழக அரசில் பல்வேறு இனங்களில் வருவாய் அளவு குறைந்ததால், கடந்த 2018-இல் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 490 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில், வருவாய் பற்றாக்குறை அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயல் நிவாரணம், பொங்கலுக்கு ரூ.1,000 அளித்தது ஆகிய வகைகளில் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவுக்கு செலவுகள் ஏற்பட்டுள்ளன.
எனவே, செலவுகள் அதிகரித்து வருவாயில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று, மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டில் அரசின் கடன் அளவு ரூ.3.55 லட்சம் கோடியாக இருக்கும் என ஏற்கெனவே மதிப்பிடப்பட்டு இருந்தது. இதுவும் குறிப்பிடத்தக்க அளவு உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை எதிர்நோக்கி...: மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களே அவகாசம் உள்ளன. தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால், நிதிநிலை அறிக்கையில் மக்களைக் கவரும் வகையிலான சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. வரும் 8-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.  இந்தக் கூட்டத்தில், பேரவைக் கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். ஒரு வார காலத்துக்கு பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com