மக்களவைத் தேர்தலில் அதிமுக, பா.ஜ.க.வை வீழ்த்த உறுதியேற்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வை வீழ்த்த பொதுமக்கள் உறுதியேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக, பா.ஜ.க.வை வீழ்த்த உறுதியேற்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வை வீழ்த்த பொதுமக்கள் உறுதியேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
 குமாரபாளையத்தை அடுத்த கல்லாங்காட்டுவலசில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இளைஞர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டிமுன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது:
 காங்கிரஸ் கட்சிப் பணிக்கு வந்துள்ள பிரியங்கா, நாட்டுக்காக உயிரை ஈந்த இந்திரா காந்தியின் மறு உருவமாகக் காட்சியளிக்கிறார். இவரின் வரவால் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.
 மத்தியில் ஆளும் பா.ஜ.க., மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க.வால் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, தொழில் நசிவு என பல்வேறு பிரச்னைகளால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 வரும் மக்களவைத் தேர்தலில் நல்லவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க.வை வீழ்த்த, திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.
 அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் பேசியது: கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசின் சாதனைகள் எதுவும் இல்லை. வெற்று அறிவிப்புகளாகவே உள்ளது. நடிகையின் திருமணத்துக்கும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கும் காட்டும் ஆர்வத்தை பிரதமர் மோடி, விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க காட்டவில்லை.
 காங்கிரஸ் ஆட்சியில் 72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகளின் கடன் ஒரு நாளைக்கு ரூ. 3.32 தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஓராண்டில் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பா.ஜ.க. அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளில் 4 கோடி பேருக்குக் கூட வேலை கிடைக்கவில்லை. பா.ஜ.க. ஆட்சியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண ஏழை, எளிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com