முத்துராமலிங்கத் தேவர் என்றே பாடத்தில் பெயர் இடம்பெறும்

ஏழாம் வகுப்பு பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றே பெயர் இடம்பெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி கூறினார்.


ஏழாம் வகுப்பு பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றே பெயர் இடம்பெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி கூறினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேசியது:
ஏழாம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பாடம் இடம்பெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி கூறியிருந்தார்.  ஆனால், பாடத்தில் முத்துராமலிங்கம் என்று மட்டும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. சர்தார் வல்லபபாய் பட்டேல், பிரணாப் முகர்ஜி போல முத்துராமலிங்கத் தேவர் என்று பெயர் இடம்பெற வேண்டும். சட்டப்பேரவையில் கையெழுத்திடும்போது முத்துராமலிங்கத் தேவர் என்றே அவர் கையெழுத்திட்டுள்ளார். அதனால், அதை அப்படியே இடம்பெற செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு, அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து, ஏழாம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்கத் தேவர் என்றே பெயர் இடம் பெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com