பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கால் பதிக்கும் இடங்களில்.. தமிழிசையின் பேச்சு

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கால் பதிக்கும் இடங்களில் எல்லாம் உறுதியாக வெற்றி பெறுவோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கால் பதிக்கும் இடங்களில்.. தமிழிசையின் பேச்சு


ஈரோடு: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கால் பதிக்கும் இடங்களில் எல்லாம் உறுதியாக வெற்றி பெறுவோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து தமிழிசை பேசுகையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கால் பதிக்கும் இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம். தமிழகத்தில் இருந்து அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை பாஜகவுக்கு பெற்றுத் தருவோம் என்று கூறினார்.

பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நடைபெற்ற பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிச் சென்றுள்ள நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று ஈரோட்டுக்கு வருகை தந்துள்ளார்.

புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வியாழக்கிழமை காலை கோவை விமானம் நிலையம் வந்த அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு மாவட்டம்,  சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலியில் வந்து இறங்கினார். 

அங்கு, காலை 11 மணிக்கு நெசவாளர்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து பகல் 12  மணிக்கு சித்தோடு - பெருந்துறை சாலையில் உள்ள ஸ்ரீநகரில் வாக்குச்சாவடி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல்  மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில்,  மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து கங்காபுரத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com