திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 5ஆம் நாளை முன்னிட்டு குடைவரைவாயில் தீபாராதனை  நடைபெற்றது.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 5ஆம் நாளை முன்னிட்டு குடைவரைவாயில் தீபாராதனை  நடைபெற்றது.
இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
முக்கிய நிகழ்ச்சியாக ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலையில் மேலக்கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். 
தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. அப்போது எதிர்சேவையாக தங்க சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர்  சுவாமி, அம்மன் வீதி உலா  நடைபெற்றது.
இன்று: ஆறாம் திருநாளான வெள்ளிக்கிழமை (பிப். 15) காலையில் கோ ரதம், இரவில் வெள்ளி ரதம் வீதி உலா நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com