தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். 
தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்


தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி,

பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். 

திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாமணி கோவை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக இருந்த சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த டி.என். ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.   

கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த கே. விஜயகார்த்திகேயன் தமிழக ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். 

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டி.கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.     

தமிழக சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு குடிநீர் விநியோகம், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநராக இருந்த ஆனந்த் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். 

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் சுகாதாரத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளது. 

சுகாதாரத் துறை முதன்மை செயலாளராக இருந்த ஜே.ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ். கணேஷ் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். 

பொள்ளாச்சி துணை ஆட்சியராக இருந்த பி. காயத்ரி கிருஷ்ணன் வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலர் க.பாலச்சந்திரனுக்கு கூடுதலாக பதிவுத்துறை ஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com